/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லாட்ஜ் உரிமையாளர்களுடன் கோபி போலீசார் ஆலோசனை
/
லாட்ஜ் உரிமையாளர்களுடன் கோபி போலீசார் ஆலோசனை
ADDED : நவ 25, 2024 02:22 AM
கோபி: கோபியில் இயங்கும் லாட்ஜ் உரிமையாளர் மற்றும் மேலாளர்க-ளுக்கான ஆலோசனை கூட்டம், கோபி இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில், கோபி போலீஸ் ஸ்டேசனில் நேற்று நடந்தது.
எஸ்.ஐ., சத்யன் முன்னிலை வகித்தார். விடுதிகளில் பதிவேடு-களை சரியாக பராமரிக்க வேண்டும். விடுதிகளில் தங்குவோரின் ஆதார், செல்போன் மற்றும் முகவரி விபரங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும். சந்தேகப்படும் நபர்கள் இருந்தால், போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். மது, சூதாட்டம் மற்றும் சட்ட விரோத செயல்களுக்கு அறை கொடுக்க கூடாது. பிற மாநிலம் மற்றும் பிற நாட்டினர் தங்கியிருந்தால், போலீசா-ருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் 'சிசிடிவி' கேமரா கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.