/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நிறைவு பெறும் தருவாயில் கோபி - சித்தோடு 4 வழிச்சாலை பணி
/
நிறைவு பெறும் தருவாயில் கோபி - சித்தோடு 4 வழிச்சாலை பணி
நிறைவு பெறும் தருவாயில் கோபி - சித்தோடு 4 வழிச்சாலை பணி
நிறைவு பெறும் தருவாயில் கோபி - சித்தோடு 4 வழிச்சாலை பணி
ADDED : ஜூன் 30, 2025 04:25 AM
கோபி: கோபி-சித்தோடு வரை, நான்கு வழிச்சாலை திட்டப்பணி, விரைவில் நிறைவு பெற உள்ளது.
கோபி-சித்தோடு வரை, 30.6 கி.மீ., தொலைவுக்கு, 320 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலை திட்டப்பணி, 2021 பிப்., மாதத்தில் துவங்கியது. இதற்காக பிரதான சாலையோரத்தில் இருபுறமும் பல ஆண்டுகளாக இருந்த, பழமையான புளியமரம், வேப்ப மரம், புங்கன்மரம், வாகை மரம், நாவல் மரம் என, 3,300 மரங்கள் வரை வெட்டி அகற்றப்பட்டன. நான்காண்டுகளை கடந்து நடக்கும் சாலை விரிவாக்கப்பணி இறுதி கட்டத்தை எட்டி-யுள்ளது.
இதுகுறித்து அத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோபி--சித்தோடு வரை, நான்கு வழிச்சாலை பணிகள் முடியும் தரு-வாயில் உள்ளது. பிற பணிகள் அனைத்தும் முடிந்துள்ளது. 'ரோடு மார்க்' என்ற சாலையில் கோடு போடும் பணி மற்றும் முக்கிய சந்-திப்புகளில் சிக்னல் அமைப்பது போன்ற சிறு பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது' என்றனர்.