கோபி தாலுகாவில் நடப்பாண்டில் சராசரி அளவை கடந்த மழை
கோபி தாலுகாவில் நடப்பாண்டில் சராசரி அளவை கடந்த மழை
ADDED : நவ 23, 2026 06:27 AM
கோபி:கோபி தாலுகாவில் நடப்பாண்டில், சராசரி அளவை விஞ்சி மழை பெய்துள்ளது.
கோபி
தாலுகாவில் நடப்பாண்டில், ஜன., மாதத்தில் இரு நாட்கள், 6.3 மி.மி., மழை
பெய்தது. இதேபோல் பிப்ரவரியில் இரு நாளில், 7.3 மி.மீ., மார்ச்சில் ஒரு
நாள் மட்டும், 21.1 மழை பெய்துள்ளது. ஏப்ரல் மாதத்தில், ஒரு நாள் கூட
மழை பெய்யவில்லை. மே மாதத்தில், பத்து நாளில், 115.4 மி.மீ.,; ஜூனில் ஆறு
நாளில், 52.2 மழை
பதிவானது. ஜூலையில் ஒரு நாள் கூட மழையில்லை.
ஆகஸ்ட்டில் ஆறு நாளில், 72.2 மி.மீ.,; செப்., மாதத்தில் ஏழு நாளில், 100.4
மி.மீ.,; அக்டோபரில், 11 நாளில், 387 மி.மீ.,; நவ., மாதத்தில் இரு
நாளில், 26.6 மி.மீ., மழை பெய்துள்ளது. அதாவது நடப்பாண்டு துவங்கி
நேற்று வரை, 324 நாட்களில், 45 நாட்கள், 789 மி.மீ., மழை
பதிவாகியுள்ளது. கோபி தாலுகாவின் ஆண்டு சராசரி மழை அளவான, 785
மி.மீ., ஒப்பிடுகையில், நான்கு மி.மீ., கூடுதலாக மழை பெய்துள்ளதாக
அதிகாரிகள் தெரிவித்தனர்.
