/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீபாவளி கூட்டத்தைகண்காணிக்க 'கோபுரம்'
/
தீபாவளி கூட்டத்தைகண்காணிக்க 'கோபுரம்'
ADDED : அக் 27, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீபாவளி கூட்டத்தைகண்காணிக்க 'கோபுரம்'
தாராபுரம், அக். 27-
தீபாவளி நெரிசலை கட்டுப்படுத்த, தாராபுரத்தில் முக்கிய சாலைகள் சந்திப்பில், போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ளனர்.
தாராபுரம், பூக்கடை கார்னர், வசந்தா ரோடு, என்.என்.பேட்டை வீதி, பெரிய கடை வீதி என நான்கு வீதிகள் சந்திக்கும் இடத்தில், சாதாரணமாகவே நெரிசல் அதிகமாக காணப்படும். தீபாவளி பண்டிகையால் கடந்த சில நாட்களாக, நெரிசல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நான்குசாலை சந்திப்பால், போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ளனர். இதில் போலீசார் நின்றபடி ஒலிபெருக்கியில் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டுகின்றனர். போக்குவரத்தை ஒழுங்கு செய்ய துவங்கியுள்ளனர்.