/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நள்ளிரவில் விபத்தில் சிக்கிய அரசு பஸ்; 14 பேர் காயம்
/
நள்ளிரவில் விபத்தில் சிக்கிய அரசு பஸ்; 14 பேர் காயம்
நள்ளிரவில் விபத்தில் சிக்கிய அரசு பஸ்; 14 பேர் காயம்
நள்ளிரவில் விபத்தில் சிக்கிய அரசு பஸ்; 14 பேர் காயம்
ADDED : டிச 11, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நள்ளிரவில் விபத்தில் சிக்கிய
அரசு பஸ்; 14 பேர் காயம்
தாராபுரம், டிச. 11-
கோவையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. தாராபுரம் பைபாஸ் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு சென்றது. ராமேஸ்வரத்தை சேர்ந்த டிரைவர் ராமநாதன், 36, பஸ்சை ஓட்டினார். தனியார் கல்லூரி அருகே சென்றபோது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக, அரசு பஸ் கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் டிரைவர் ராமநாதன், கண்டக்டர் தங்கம், பயணிகள் உள்பட, 14 பேர் காயம் அடைந்தனர். அனைவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.