sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

/

நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


ADDED : ஜன 08, 2025 02:49 AM

Google News

ADDED : ஜன 08, 2025 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

தாராபுரம், :தாராபுரத்தில் விபத்தில் இறந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

தாராபுரத்தை அடுத்த ஆச்சியூரை சேர்ந்தவர் ஆறுச்சாமி, 39; கடந்த, 2016 நவ.,23ல் நண்பர் கார்த்திக்குடன் பைக்கில் அமர்ந்து, பழனி சென்றார்.

தொப்பம்பட்டி நால்ரோடு அருகே, அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்தில் ஆறுச்சாமி பலியானார். ஆறுச்சாமி மனைவி ஆராயி, தாராபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ௭.௫௦ லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, 2023 பிப்.,5ல் உத்தரவிட்டார். அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால், நிறைவேற்று மனு தாக்கல் செய்தார்.

இதில் வட்டியுடன் சேர்த்து, 10.57 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது. இதையும் செலுத்தாததால், தாராபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சரவணன் உத்தரவின்படி, தாராபுரம் வந்த அரசு பஸ்சை, நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.

சி.கே.கே., அறக்கட்டளை சார்பில் இலக்கிய விழா

ஈரோடு-, :ஈரோடு சி.கே.கே., அறக்கட்டளையின், 44வது ஆண்டு இலக்கிய விழாவையொட்டி, கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா ஈரோட்டில் நடந்தது.

கருத்தரங்கிற்கு பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமை வகித்தார். கருத்தரங்கில், மலர்கள் மலர்ந்த பாதை தலைப்பில் மகேஸ்வரி சத்குரு; அறிவினால் ஆவது உண்டு தலைப்பில் கவிஞர் வீரபாண்டியன் பேசினர். வாசுகி மனோகரன் உள்ளத்தில் உள்ளது அமைதி தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

மாலையில் நடந்த விருது வழங்கும் விழாவுக்கு பாரதி கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். நீரதிகாரம் நுாலை எழுதிய எழுத்தாளர் வெண்ணிலாவுக்கு, இலக்கிய விருதை முதலியார் எஜுகேஷனல் டிரஸ்ட் தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் பாலுசாமி, அக்னி ஸ்டீல் நிர்வாக இயக்குனர் தங்கவேல் வழங்கினர். தொடர்ந்து நடந்த சொற்பொழிவில் உரைகல் தத்துவமும் உலக இலக்கியமும் தலைப்பில் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேசினார். விஜய் டிவி கோபிநாத், இந்த வினாடி இனியது என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக சி.கே.கே., அறக்கட்டளை தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். செயலாளர் ஸ்ரீபிரபு நன்றி கூறினார். மாவட்ட நீதிபதி முருகேசன், மேயர் நாகரத்தினம், அறக்கட்டளை பொருளாளர் ரவி உதயன், வேலுச்சாமி மற்றும் இலக்கிய ஆர்வலர் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us