/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் 2வது நாளாக அரசு பஸ் சேவை பாதிப்பு
/
மாவட்டத்தில் 2வது நாளாக அரசு பஸ் சேவை பாதிப்பு
ADDED : அக் 09, 2024 12:52 AM
மாவட்டத்தில் 2வது நாளாக
அரசு பஸ் சேவை பாதிப்பு
ஈரோடு, அக். 9-
ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் நாளாக நேற்றும், 175க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயங்காததால் மக்கள் அவதிப்பட்டனர்.
ஈரோடு அரசு போக்குவரத்து கழகத்தில் தி.மு.க., தொழிற்சங்கமான எல்.பி.எப். மண்டல நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. இதனால் கடந்த சில தினங்களாக சங்க உறுப்பினராக உள்ள டிரைவர், கண்டக்டர், தொழில் நுட்ப பணியாளர்கள், பணியில் இல்லாததால் அரசு பஸ் சேவை பாதிக்கப்பட்டது. ஈரோடு அரசு போக்குவரத்து மண்டலத்தில், 13 கிளைகளில், ஏழு கிளைகளில், 110 பஸ்கள் இயங்கவில்லை. நேற்று இரண்டாம் நாளாக, 175க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயங்கவில்லை. பவானி கிளையில் மட்டும், 35 பஸ்கள் இயக்கப்படவில்லை. குறிப்பாக தொலை துார பஸ்கள் நிறுத்தப்பட்டன. நாளை தேர்தல் நிறைவு பெறுகிறது. அதுவரை பஸ் சேவையில் பாதிப்பு ஏற்படும் என்பது உறுதியாகி உள்ளது. இதற்கிடையில் தொழிலாளர்கள் தவறாமல் பணிக்கு வர வேண்டும் என்று கூறி, ஏற்கனவே, 10ம் தேதி வரை விடுப்பு பெற்றவர்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

