/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பர்கூர் மலைப்பாதையில் சேற்றில் சிக்கிய அரசு பஸ்
/
பர்கூர் மலைப்பாதையில் சேற்றில் சிக்கிய அரசு பஸ்
ADDED : டிச 04, 2024 01:29 AM
அந்தியூர், டிச. 4-
அந்தியூரில் இருந்து பர்கூர்மலையில் உள்ள மடம் கிராமத்துக்கு, அரசு பஸ் இயக்கப்படுகிறது.
நேற்று காலை வழக்கம்போல் மடம் சென்ற அரசு பஸ் மீண்டும் அந்தியூருக்கு புறப்பட்டது. பஸ்சில், ௨௦க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பர்கூர்மலையில் தற்போது தாமரைக்கரை - ஈரெட்டி வரை சாலை சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் ஈரெட்டி வளைவில் காலை, 8:50 மணியளவில் பஸ் சென்றபோது, பஸ்ஸின் வலது பின்பக்க டயர்கள் சாலையோர பள்ளத்தில் சிக்கி சாயும் நிலைக்கு சென்றது. இதனால் பயணிகள் கூச்சலிட்டபடி அடித்துபிடித்து இறங்கினர்.
சாலை பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரத்தில் கயிறு கட்டி பஸ்சை இழுக்க முடிவு செய்யப்பட்டது. அரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பஸ் சாலைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து பயணிகளும் ஏறிக்கொள்ள பஸ் புறப்பட்டது.