/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திருச்செங்கோட்டில் அரசு பஸ் திருட்டு; போதை வாலிபர் கைது
/
திருச்செங்கோட்டில் அரசு பஸ் திருட்டு; போதை வாலிபர் கைது
திருச்செங்கோட்டில் அரசு பஸ் திருட்டு; போதை வாலிபர் கைது
திருச்செங்கோட்டில் அரசு பஸ் திருட்டு; போதை வாலிபர் கைது
ADDED : ஜன 03, 2025 01:36 AM
திருச்செங்கோட்டில் அரசு பஸ்
திருட்டு; போதை வாலிபர் கைது
திருச்செங்கோடு, ஜன. 3-
திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சை, நேற்று முன்தினம் இரவு ஊத்தங்கரையை சேர்ந்த வாலிபர் திருடி சென்றார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்டில், எஸ்.9 வழித்தட அரசு டவுன் பஸ்சை நேற்று முன்தினம் இரவு, உணவு இடைவேளைக்காக ஓட்டுனர் பச்சமுத்து நிறுத்திவிட்டு சென்றுள்ளார். சாப்பிட்டு வந்த பின் பார்த்தபோது, பஸ்சை காணவில்லை. உடனே அவர் திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
இரவு முழுவதும் காணாமல் போன பஸ்சை, போலீசார் தேடி வந்த நிலையில், அந்த பஸ் சங்ககிரி அருகே உள்ள தீரன் சின்னமலை நினைவிடம் அருகே இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சென்று பார்த்தபோது குடி போதையில் ஒருவர் பஸ்சில் படுத்திருந்தார். பின்னர் அந்த நபரையும், பஸ்சையும் மீட்டு திருச்செங்கோடு கொண்டு வந்தனர். போதையில் இருந்த நபரை, போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சுயநினைவுக்கு வந்த பின்பு, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த சண்முகம், 21, திருச்செங்கோட்டில் ரிக் நிறுவனத்துக்கு வேலை தேடி வந்ததும், குடிபோதையில் பஸ் ஸ்டாண்டில் இருந்து, அரசு பஸ்சை ஓட்டி சென்றதும் தெரிய வந்தது. திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்கு பதிந்து, சண்முகத்தை கைது செய்து, திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.
இது குறித்து, போக்குவரத்து துறை கிளை மேலாளர் செந்தில்குமாரிடம் கேட்டபோது,''அது ஒன்றும் இல்லை சின்ன சம்பவம்தான்,'' என, தெரிவித்தார். அரசு பஸ்சையே போதை ஆசாமி திருடி சென்றது, திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.