/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு ஊழியர் விடுப்புடன் ஸ்டிரைக்; ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர் விடுப்புடன் ஸ்டிரைக்; ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 13, 2026 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஈவோடு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, அரசு ஊழியர்கள் மாவட்ட அளவில், 1,385 பேர் விடுப்புடன் பங்கேற்றனர். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது. அரசு துறைகளின் அளவை குறைக்கக்கூடாது. மத்திய அரசின் தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள், விதைச்சட்டம், மின்சார திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தினர்.

