/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிற்சங்கத்தினர் போராட்டத்துடன் மறியல்
/
தொழிற்சங்கத்தினர் போராட்டத்துடன் மறியல்
ADDED : பிப் 13, 2026 04:28 AM

காங்கேயம்: தொழிலாளர்களுக்கு விரோதமான நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். மின்சார துறையை தனியாருக்கு வழங்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று, வேலை நிறுத்தம் மற்றும் மறியலுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன்படி காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் முன், விவசாய சங்க கூட்டமைப்பு, விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட, 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
* தாராபுரத்தில் பழைய நகராட்சி அலுவலகம் அருகே, ஐ.என்.டி.யு.சி., திருப்பூர் மாவட்ட பொது செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், எல்.பி.எப்., - சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

