தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு சட்டக்கல்லுாரி மாணவர் தேசிய போட்டியில் அபாரம்

ஈரோடு சட்டக்கல்லுாரி மாணவர் தேசிய போட்டியில் அபாரம்

ஈரோடு சட்டக்கல்லுாரி மாணவர் தேசிய போட்டியில் அபாரம்


ADDED : பிப் 13, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: சட்டக்கல்லுாரிகளுக்கு இடையேயான, தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி, ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து, 36 சட்டக் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் ஈரோடு சட்டக்கல்லுாரியின் நான்காமாண்டு மாணவர்கள் அப்துல், வெஸ்லி, அகில் ஆகியோர் அடங்கிய அணி, சிறந்த நினைவு குறிப்பு விருதை பெற்றனர்.

ஒட்டுமொத்த போட்டியில் இரண்டாமிடம் பெற்று, 45 ஆயிரம் ரூபாய் பரிசு வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, கல்லுாரி தலைவர் சிந்து ரவிச்சந்திரன் பாராட்டினார். நிகழ்வில் கல்லுாரி முதல்வர் அக்பர் அலி பெய்க், இணை செயலாளர் அருண் பாலாஜி, துணை தலைவர் காயத்ரி அருண்பாலாஜி, பரமசிவம், பேராசிரியர்கள் முத்துகுமார், பிரசாந்த், பூஜா ஸ்ரீ, ஹரிப்பிரியா, விதுலா பரணி, நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us