/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உடலுறுப்புகளை தானம் செய்தவருக்கு அரசு மரியாதை
/
உடலுறுப்புகளை தானம் செய்தவருக்கு அரசு மரியாதை
ADDED : நவ 11, 2024 07:30 AM
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகேயுள்ள மூத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் குமர வடிவேல், 56; கேரள மாநிலம் தலைச்சேரியில் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து, பைனான்ஸ் தொழில் செய்தார்.
சில தினங்களுக்கு முன் தலைச்சேரி அருகே வசூலுக்கு சென்றபோது விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் சம்மதித்தனர். கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் உடலுறுப்புகளை தானம் செய்தனர். அவரது உடல் சொந்த ஊருக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அரசு உத்தரவின்படி தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா, காங்கேயம் தாசில்தார் மோகனன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, மூத்தாம்பாளையத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. இறந்த குமரவடிவேலுக்கு சித்ரா என்ற மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.