தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோட்டில் மாணவியர் புகாரின்படி அரசு விடுதி காப்பாளர் இடமாற்றம்

ஈரோட்டில் மாணவியர் புகாரின்படி அரசு விடுதி காப்பாளர் இடமாற்றம்

ஈரோட்டில் மாணவியர் புகாரின்படி அரசு விடுதி காப்பாளர் இடமாற்றம்


ADDED : செப் 25, 2026 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 07:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு அடுத்த சித்தோடு, குமிலம்பரப்பில் செயல்படும் சமூக நீதி கல்லுாரி மாணவியர் விடுதியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அந்த விடுதியில், அட்டவணையில் உள்ளபடி மாணவியருக்கு உணவு வழங்கப்படுகிறதா, அவற்றின் தரம், மின் விளக்கு, சுகாதாரம், சமையல் அறை பராமரிப்பு, படிப்பறை, கண்காணிப்பு கேமரா செயல்பாடு, குடிநீர் வசதி, கழிப்பறை சுத்தம் போன்றவை குறித்து ஆய்வு செய்தார்.பின், மாணவியரிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மாணவியர், 'உணவு தரமாக இல்லை. உணவு பொருட்களும் தரமில்லை' என, புகார் தெரிவித்தனர். அங்குள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை அமைச்சர் ஆய்வு செய்தபோது, விடுதி காப்பாளர் காஞ்சனா குறுக்கிட்டும், புகார் தெரிவித்தவர்களை தடுக்கும் செயலிலும் ஈடுபட்டார். தரமற்ற உணவு பொருட்கள், உணவு வழங்குவதை உறுதி செய்து, விடுதி காப்பாளர் காஞ்சனாவை பணியிட மாற்றம் செய்தார். அவருக்கு பதிலாக விடுதி காப்பாளராக செல்வி என்பவர் நியமிக்கப்பட்டார். கலெக்டர் கந்தசாமி, தாசில்தார் கவிதா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us