தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பள்ளியில் 2 மாணவர் மோதல் ஒருவர் மயங்கியதால் 'அட்மிட்'

பள்ளியில் 2 மாணவர் மோதல் ஒருவர் மயங்கியதால் 'அட்மிட்'

பள்ளியில் 2 மாணவர் மோதல் ஒருவர் மயங்கியதால் 'அட்மிட்'


ADDED : செப் 25, 2026 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 07:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி:பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படிக்கும், ஓசைப்பட்டியை சேர்ந்த, 16 வயது மாணவருக்கும், காடையாம்பட்டியை சேர்ந்த, 16 வயது மாணவருக்கும் நேற்று மதியம் தகராறு ஏற்பட்டது. இதில் ஓசைப்பட்டி மாணவர் மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து சக மாணவர்கள் தெரிவித்த பின், ஆசிரியர்கள், மயங்கிய மாணவரை மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து மேல் மேல்சிகிச்சைக்கு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதை அறிந்து, மருத்துவமனை வந்த, அவரது பெற்றோர், மாணவரை, ஈரோடில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து பள்ளியில், பவானி போலீசார், பள்ளி மேலாண்மை குழுவினர், ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us