/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
2ம் பருவ பாடப்புத்தகம் பெறுவதில் அலைக்கழிப்பு அரசுப்பள்ளி ஆசிரியைகள் வருத்தம்
/
2ம் பருவ பாடப்புத்தகம் பெறுவதில் அலைக்கழிப்பு அரசுப்பள்ளி ஆசிரியைகள் வருத்தம்
2ம் பருவ பாடப்புத்தகம் பெறுவதில் அலைக்கழிப்பு அரசுப்பள்ளி ஆசிரியைகள் வருத்தம்
2ம் பருவ பாடப்புத்தகம் பெறுவதில் அலைக்கழிப்பு அரசுப்பள்ளி ஆசிரியைகள் வருத்தம்
ADDED : அக் 06, 2024 02:54 AM
ஈரோடு: இரண்டாம் பருவ பாட, நோட்டு புத்தகங்களை பெற அலைக்கழிக்கப்பட்டதாக ஆசிரியைகள், வருத்தம் தெரிவித்தனர்.
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன. அரசுப்பள்ளிகளில் முதல் நாளிலேயே பாடப்புத்தகம், நோட்டு, காலணி, புத்தகப்பை திட்டமிடப்பட்டுள்ளது. நோட்டு புத்தகங்களை பெற ஈரோடு காவிரி சாலை மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கும், காலணி, பையை பெற ஈரோடு சி.எஸ்.ஐ.கோட்டை நிதியுதவி தொடக்க பள்ளிக்கும் செல்ல ஆசிரியைகள் அறிவுறுத்தப்பட்டனர். இதில் பலத்த அலைக்கழிப்புக்கு ஆளானதாக, ஆசிரியைகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து ஆசிரியைகள் கூறியதாவது:
ஈரோடு வட்டார கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் இரண்டாம் பருவ பாட புத்தகம்,நோட்டு, காலணி,விலையில்லா புத்தகப்பை ஆகிய அனைத்து வகை கல்வி உதவி பொருட்கள் வழங்கப்பட தயார் நிலையில் உள்ளது. இவற்றை பள்ளி தலைமை ஆசிரியைகள் உள்ளிட்ட ஆசிரியைகள் வந்து பெற்று செல்லுமாறு, மொபைல் போனில் கல்வி துறையினர் தகவல் அனுப்பினர். இதற்காக இரு மையங்களும் சென்றோம். ஆனால், பள்ளிகளுக்கே கொண்டு வந்து வருவதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிட்டது. இதில் மோளகவுண்டன் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை மீனா, விபத்தில் சிக்கி ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பள்ளிகளுக்கே சென்று அனைத்து பொருட்களையும் வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதை மீறி தலைமை ஆசிரியை உள்ளிட்ட ஆசிரியைகளை, கல்வி உபகரண பொருட்களை பெற வரவழைத்த பின், பொருட்களை வழங்காமல் மீண்டும் பள்ளிக்கே செல்ல அறிவுறுத்தி அலைக்கழிப்பு செய்கின்றனர். இப்பிரச்னைக்கு கல்வி துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.