/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வினாடி-வினா போட்டி அரசுப்பள்ளி முதலிடம்
/
வினாடி-வினா போட்டி அரசுப்பள்ளி முதலிடம்
ADDED : அக் 10, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, பள்ளி கல்வித்துறை சார்பில், 2025--26ம் கல்வியாண்டிற்கான இலக்கிய மன்ற போட்டி, அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஈரோடு மாவட்ட அளவிலான போட்டி, சமீபத்தில் ஈரோட்டில் நடந்தது.
இதில் வினாடி வினா போட்டியில், பெருந்துறை ஒன்றியம் வீரணம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவியர் மதுமிதா, அபிநயா, மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றனர். ஆங்கில பேச்சு போட்டியில், மதுமிதா மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்தார். இருவரும் சென்னையில் நடக்கும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.