/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு பள்ளிகள் திறப்பு; புத்தகம், நோட்டு வழங்கல்
/
அரசு பள்ளிகள் திறப்பு; புத்தகம், நோட்டு வழங்கல்
ADDED : ஜன 03, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பள்ளிகள் திறப்பு; புத்தகம், நோட்டு வழங்கல்
ஈரோடு, ஜன. 3-
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, தமிழகத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்புக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஏற்கனவே புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டன. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, நோட்டுகள் நேற்று வழங்கப்பட்டன. இதேபோல் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கும் நோட்டு, புத்தகம் நேற்று வழங்கப்பட்டதாக, தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

