/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் அரசு டாக்டர் பலி
/
ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் அரசு டாக்டர் பலி
ADDED : அக் 23, 2024 01:23 AM
ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில்
அரசு டாக்டர் பலி
ஈரோடு, அக். 23-
சிவகிரி, தாண்டாம்பாளையம், சஷ்டி கார்டனை சேர்ந்த நல்லசாமி மகன் செந்தில்குமார், 28; சென்னை அரசு மருத்துவமனை டாக்டர். தற்போது எம்.டி., மேற்படிப்பு படித்து வந்தார்.
விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த நிலையில், இரு நாட்களாக காய்ச்சல் இருந்தது. திருப்பூர் மாவட்டம் முத்துாரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குறையவில்லை. கடந்த, 21ல் பரிசோதனை செய்ததில், வைரஸ் காய்ச்சல் என தெரியவந்தது.
இதனால் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செந்தில்குமார், ஆம்புலன்ஸில் அதே நாளில் அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் தாயார் பரமேஸ்வரி, உதவியாக மோகன்ராஜ், 50, கிளம்பினர்.
ஆம்புலன்சை டிரைவர் கவுதம் ஓட்டினார். அதிவேகமாக சென்ற நிலையில், ஈரோடு-முத்துார் சாலையில் வேலம்பாளையம் அருகே, பள்ளத்தில் கவிழுந்து மின் கம்பத்தில் மோதியது. இதில் செந்தில்குமார் உள்ளிட்ட மூவரும் பலத்த காயமடைந்தனர். மூவரும் மீட்கப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
டாக்டர் பரிசோதனையில் செந்தில்குமார் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.