/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் செல்லும் ௨௪ ஜீப்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தம்

ADDED : பிப் 01, 2025 06:58 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கும், 237 ஓட்டுச்சாவடிகளுக்கு, மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து, வரும், 4ம் தேதி காலை முதல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வி.வி.பேட் மற்றும் ஓட்டுச்சாவடி பயன்பாட்டு பொருட்கள் வாகனங்களில் எடுத்து செல்ல உள்ளனர்.
இதற்காக கூரை அமைக்கப்பட்ட, 24 லாரிகள், பெரிய லாரி வடிவ வேன்களை வாடகைக்கு அமர்த்தி உள்ளனர். இந்த வாகனங்களுடன் மண்டல அலுவலர், பாதுகாவலர்கள் செல்வதற்காக தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, 24 ஜீப்கள் தயார் செய்துள்ளனர்.
மாநகராட்சி அலுவலகத்தில் இந்த ஜீப்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் பணி நேற்று மாலை நடந்தது.
இ.வி.எம்., உள்ளிட்ட கருவிகள், பிற ஓட்டுச்சாவடி பொருட்கள் கொண்டு செல்லும் வாகனத்துடன், இந்த இக்கருவி பொருத்தப்பட்ட ஜீப், எங்கு செல்கின்றன என்பதை, மாநகராட்சி அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்-கலாம்.தவிர, இந்த வாகனங்களை ஓட்டும் டிரைவர், உடன் செல்லும் அலுவலர்கள், பாதுகாப்புக்கு செல்லும் போலீசார், பிற பணியா-ளர்கள் போன்றோர் விபரங்களையும் பட்டியலிட்டு அறிவித்துள்-ளனர்.