ADDED : ஜூலை 26, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தமிழகத்தில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல், புனரமைத்தல் பணிக்கு மானிய தொகை வழங்கப்படுகிறது. ஒரு முறை மானியம் பெற்றால், 5 ஆண்டுகள் வரை பெற இயலாது.
ஆலய கட்டடத்துக்கு ஏற்ப மானியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 10 முதல், 15 ஆண்டு வரை, 10 லட்சமும், 15 முதல், 20 ஆண்டுக்கு, 15 லட்சம், 20 ஆண்டுக்கு மேல், 20 லட்சம் ரூபாய் மானியத்தொகை வழங்கப்படும். மானியம் பெற விரும்புவோர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.