/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெள்ளோடு சரணாலயத்துக்கு அதிகம் வரும் சாம்பல் கொக்கு
/
வெள்ளோடு சரணாலயத்துக்கு அதிகம் வரும் சாம்பல் கொக்கு
வெள்ளோடு சரணாலயத்துக்கு அதிகம் வரும் சாம்பல் கொக்கு
வெள்ளோடு சரணாலயத்துக்கு அதிகம் வரும் சாம்பல் கொக்கு
ADDED : மே 10, 2024 07:03 AM
ஈரோடு : வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு, விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
ஆனால் வெயில் சுட்டெரிப்பதால், பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது. அதேசமயம் சரணாலய ஏரியில் தண்ணீரும் குறைந்து காணப்படுகிறது. இதனால் அதிகாலை, மாலையில் தான் பறவைகளை ஓரளவு காண முடியும். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:வெள்ளோட்டின் அடையாளம் என கூறப்படும் சாம்பல் கொக்கு தற்போது இங்கு காணப்படுகிறது. இவை அதிகளவில் மீன்களை பிடித்து விரும்பி உண்ணும். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டுமே இவற்றை காண முடியும்.
சாம்பல் கொக்கு தனிமை விரும்பி. கூடு கட்டும் போது கூட்டமாக இருக்கும். தாகம் தீர்க்க வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு அதிகளவில் தற்போது வருகிறது. கூட்டை பாதுகாப்பது, முட்டையை அடை காப்பது, குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதில் வியக்கதக்க பண்பை வெளிப்படுத்தும். அதிகாலை நேரத்தில் பிற அரிய வகை பறவைகளையும் சரணாலயத்தில் காணலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.