/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் பசுமை திருவிழா
/
நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் பசுமை திருவிழா
ADDED : டிச 15, 2024 01:34 AM
ஈரோடு, டிச. 1௫--
ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் 'பசுமை திருவிழா--2024' என்ற தலைப்பில், 12 ஆயிரம் மரக்கன்று, மாணவ--மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
நந்தா கல்வி நிறுவனங்கள், ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன், ரவுண்ட் டேபில் இந்தியா, பி.என்.ஐ., சமூக அமைப்புகளுடன் இணைந்து நடந்த விழாவில், 25 வகையான மரக்கன்று வழங்கப்பட்டது. விழாவுக்கு ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை தாங்கினார். ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தலைவர் சின்னசாமி, சுற்றுச்சூழல் குழு தலைவர் தர்மராஜ், ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள்-211- தலைவர் கார்த்திகேயன், ஜே.சி.ஐ., முன்னாள் தலைவர் யுவராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்
களாக கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு, 12 ஆயிரம் மரக்கன்றுகளை ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் வழங்கினார்.