/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகன் இறந்த துக்கம்: தம்பதி தற்கொலை
/
மகன் இறந்த துக்கம்: தம்பதி தற்கொலை
ADDED : ஜூலை 31, 2025 02:37 AM
கோபி:ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே கந்தசாமியூரை சேர்ந்தவர் வேலுசாமி, 53; விவசாயி. மனைவி தீபா, 40. இவர்களது மகன் பிரதீப், 22. இவர் தறி குடோன் மேற்கூரையை சரி செய்ய, கடந்த ஏப்ரலில், அதன் மீது ஏறிய போது, ஆஸ்பெஸ்டாஸ் சீட் உடைந்து கீழே விழுந்து இறந்தார். மகன் இறந்தது முதல், பெற்றோர் மன உளைச்சலில் இருந்தனர்.
இந்நிலையில் இவர்கள், நேற்று மதியம், 1:00 மணியளவில் வீட்டில் இறந்து கிடந்தனர். தகவலறிந்த கவுந்தப்பாடி போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், இறந்த தம்பதியின் வீட்டில் இருந்து, அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அதில், மகன் இறந்த துக்கம் தாளாமல், பூச்சி மருந்தை குடித்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர். தீபா இறப்புக்கு முன், உறவினர் ஒருவருக்கு, 'பிரதீப்பின் பிரிவை எங்களால் மறக்க முடியவில்லை. அதனால் நாங்களும் மகனை தேடி போகிறோம் என 'வாய்ஸ் மெசேஜ்' அனுப்பி இருந்தனர்.