தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ௨௭ல் பி.எப்., குறைதீர் கூட்டம்

௨௭ல் பி.எப்., குறைதீர் கூட்டம்

௨௭ல் பி.எப்., குறைதீர் கூட்டம்


ADDED : செப் 24, 2024 02:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2024 02:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மண்டல வைப்பு நிதி ஆணையர் டி.ஆர்.வீரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: பெருந்துறை தாலுகா ஈங்கூர் அக்னி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன கூட்ட அரங்கில் வரும், 27ல் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. காலை, 9:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரை சந்தாதாரர்களுக்கும், மதியம், 2:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை தொழிலதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் காப்பீடு தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us