/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மனைவி, மகள்கள் மாயம் மளிகை கடைக்காரர் புகார்
/
மனைவி, மகள்கள் மாயம் மளிகை கடைக்காரர் புகார்
ADDED : அக் 08, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு பெரியவலசு ராதாகிருஷ்ணன் இரண்டாவது வீதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார், 30; பெரியவலசில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் மனைவி அர்ச்சனா, 26; தம்பதிக்கு எட்டு மற்றும் இரண்டு வயதில் இரு மகள்கள் உள்ளனர்.
கடந்த, ௬ம் தேதி காலை மகள்களுடன், வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. சந்தோஷ்குமார் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.