ADDED : ஜூன் 05, 2026 03:48 AM
ஈரோடு:ஈரோட்டில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் குரூப் 1, 2, 2ஏ, 4 ஆகிய போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்க நிகழ்ச்சி நடந்தது. பயிற்சி வகுப்பை துவக்கி கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்து பேசினார்.
போட்டி தேர்வுக்கு படிப்பதுடன், நாளிதழ்களை படித்து குறிப்பெடுக்க வேண்டும். கால அட்டவணையை தயார் செய்து, பாடவாரியாக நேரம் ஒதுக்கி படிப்பது, குறைந்த மதிப்பெண் பெறும் பாடப்பகுதிக்கு அதிக நேரம் ஒதுக்கி படிப்பது, நாளிதழ்களை வாசிப்பது, 'டிவி' செய்திகளை தொடர்ந்து கவனிப்பது சிறந்த பயிற்சியாகும். இங்கு கடந்த, 2024 -- 25ல், 101 மாணவர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு பணிக்கு சென்றுள்ளனர்.
புதிய பயிற்சி வகுப்பில், 141 பேர் பங்கேற்றுள்ளனர். இவ்வாறு பேசினார். நிகழ்வில் மைய உதவி இயக்குனர் ராதிகா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பாண்டீஸ்வரி, கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.
