ADDED : ஜூன் 05, 2026 03:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
வெண்டிபாளையம் கருணாகரன் மனைவி சாந்தா, 55; ஈரோடு ரயில்வேக்கு
உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியை ஒப்பந்த முறையில்
மேற்கொண்டார். உடல் நிலை பாதிப்பால் ஆறு மாதமாக வேலைக்கு செல்லாமல்
வீட்டில் இருந்தார்.
நேற்று அதிகாலை, 4:45 மணிக்கு முன்னதாக டீ
குடிக்க வீட்டருகே செல்லும் தண்டவாளத்தை கடந்தபோது, ரயில் மோதி
பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார்
விசாரிக்கின்றனர்.
