/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு லாட்ஜில் சிக்கிய துப்பாக்கி; ஆசாமி குறித்து தீவிர விசாரணை
/
ஈரோடு லாட்ஜில் சிக்கிய துப்பாக்கி; ஆசாமி குறித்து தீவிர விசாரணை
ஈரோடு லாட்ஜில் சிக்கிய துப்பாக்கி; ஆசாமி குறித்து தீவிர விசாரணை
ஈரோடு லாட்ஜில் சிக்கிய துப்பாக்கி; ஆசாமி குறித்து தீவிர விசாரணை
ADDED : செப் 27, 2024 07:35 AM
ஈரோடு: ஈரோட்டில் லாட்ஜ் அறையில், ஆறு தோட்டாக்களுடன் துப்பாக்கியை வைத்து சென்றவர் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோட்டில், சத்தி சாலையில் ஆர்.ஆர்.லாட்ஜ் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை ஊழியர்கள் அறையை சுத்தம் செய்தனர். அப்போது ஒரு அறையில் படுக்கை தலையணை அடியில், நாட்டு துப்பாக்கி ஒன்றும், ஆறு தோட்டாக்களும் இருந்தன. டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி., முத்துகுமரன் தலைமையில் சென்ற போலீசார் அவற்றை கைப்பற்றி, ஊழியர்கள், மேலாளர் உள்ளிட்டோரிடம் தனித்தனியே விசாரித்தனர்.
இதுபற்றி போலீசார் கூறியதாவது: லாட்ஜ் அறையில் தங்கியிருந்த நபர், உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் சுரேந்தர், 42, என முகவரி அளித்த ஆசாமி, இரு தினங்கள் அறையில் தங்கியுள்ளார். வட மாநிலத்தில் பயன்படுத்தும் கைத்துப்பாக்கி இது. ரயிலில் கொண்டு வந்துள்ளார். ரயில்வே ஸ்டேஷன் பகுதி, ஆர்.ஆர்.லாட்ஜ்ஜை ஒட்டிய பகுதி 'சிசிடிவி' கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படை யில் விசாரணை நடக்கிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.