/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சொக்கநாச்சி அம்மன் கோவிலில் குண்டம் விழா
/
சொக்கநாச்சி அம்மன் கோவிலில் குண்டம் விழா
ADDED : மே 09, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர் : அந்தியூர் அருகே, பருவாச்சியில் பிரசித்தி பெற்ற சொக்கநாச்சி அம்மன் கோவில் உள்ளது.
இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த, 25ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த,1ல், கோவில் குண்டத்தின் முன்புறம் எருமை கிடாய் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான நேற்று குண்டம் இறங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. ஆண்கள், பெண்கள் என பலரும் கையில் பிரம்பு ஏந்தி வேப்பிலையுடன் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். பருவாச்சி, அம்மன் பாளையம், தாண்டாம்பாளையம் பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.