/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு எல்லை மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா
/
ஈரோடு எல்லை மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா
ADDED : மார் 28, 2024 07:09 AM
ஈரோடு : ஈரோடு அடுத்த சூளையில் பிரசித்திபெற்ற எல்லை மாரியம்மன், சமயபுரத்து மாரியம்மன், குண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோவில்களின் குண்டம் விழா கடந்த, 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 25ம் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டது.முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நேற்று காலை நடந்தது. கோவில் பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கினர். அதன்பின், கோவில் முன் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். மாவிளக்கு பூஜையை தொடர்ந்து, பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிசட்டி ஏந்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இன்று மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி திருவீதி உலா நடக்கிறது. நாளை ( 29ம் தேதி) மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.