/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பச்சைநாயகி அம்மன் கோவிலில் குண்டம் விழா
/
பச்சைநாயகி அம்மன் கோவிலில் குண்டம் விழா
ADDED : ஜன 02, 2026 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி, கொளப்பலுார் அருகே அம்மன்கோவில் பதியில், பச்சை-நாயகி அம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் மற்றும் தேர்த்-திருவிழா, கடந்த டிச.,17ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு குண்டத்துக்கு தீ மூட்டப்பட்டது.
அதிகாலை, 2:00 மணிக்கு அம்மை அழைத்தலை தொடர்ந்து திருக்கொடி தீபம் ஏற்றப்பட்டது. பின் தலைமை பூசாரி ராஜா, குண்டத்துக்கு பூஜை செய்து, காலை, 8:45 மணிக்கு குண்டம் இறங்கி துவக்கி வைத்தார். அவரை தொடர்ந்து நுாற்றுக்கணக்-கான பக்தர்கள், 9:45 மணி வரை தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

