/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த குண்டம் தீ மிதி விழா
/
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த குண்டம் தீ மிதி விழா
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த குண்டம் தீ மிதி விழா
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த குண்டம் தீ மிதி விழா
ADDED : மே 02, 2025 01:27 AM
பவானி:
அம்மாபேட்டை அருகே, செல்லாயூரில் செல்லியண்டி அம்மன், பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை குண்டம் திருவிழா, சித்திரை மாதத்தில் வெகு விமர்சையாக கோவிலில் நடைபெறும். அந்த வகையில் கடந்த, 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து வந்தது.
முக்கிய நிகழ்வான நேற்று, பெண்கள் பொங்கல் வைத்தனர். பின்னர் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமனோர் நீண்ட வரிசையில் வந்து, சுவாமி தரிசனம் செய்தனர். சிலர் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று கம்பம் பிடுங்கி, மஞ்சள் நீராட்டு விழாவுடன் பண்டிகை நிறைவடைகிறது.