/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கள்ளச்சாராயம் காய்ச்சி கைதான தி.மு.க., பிரமுகர் உட்பட இருவர் மீது 'குண்டாஸ்'

ADDED : அக் 09, 2025 01:37 AM
ஈரோடு, கள்ளச்சாராயம் காய்ச்சி கைதான வழக்கில் சிக்கிய, தி.மு.க., பிரமுகர் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கொளந்தான் வலசு குமரன் காட்டை சேர்ந்தவர் சுரேஷ், 42. பெருந்துறை, பெத்தாம்பாளையம் கோவில் பாளையம் வள்ளி நகரை சேர்ந்தவர் கந்தன், 50. கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக இருவர் மீதும் புகார் எழுந்தது. ஈரோடு மதுவிலக்கு போலீசார் கண்காணித்து, இருவரும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை உறுதி செய்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து, 12 லிட்டர் கள்ளச்சாராயம், 200 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றினர். இருவர் மீதும் வழக்குப்பதிந்த போலீசார் கைது செய்தனர்.
இதில் சுரேஷ், தி.மு.க.,வில் பெருந்துறை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும், பெத்தாம்பாளையம் பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என, ஈரோடு எஸ்.பி., மூலம் கலெக்டருக்கு மதுவிலக்கு போலீசார் பரிந்துரைத்தனர். இதை பரிசீலித்த கலெக்டர் கந்தசாமி, இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி இருவரும், கோவை
மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.