ADDED : நவ 02, 2026 06:17 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:சத்தியமங்கலம்
அடுத்த கெஞ்சனூரை சேர்ந்த அப்புசாமி, 51; கொள்ளை, வழிப்பறி, கஞ்சா
விற்பனை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டார். புன்செய்
புளியம்பட்டி போலீசார் கைது செய்து, கோபியில் உள்ள மாவட்ட சிறையில்
அடைத்தனர்.
பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதால், இவரை குண்டர்
தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க, ஈரோடு எஸ்.பி., கிரண் ஸ்ருதி
பரிந்துரைத்தார். கலெக்டர் கந்தசாமி பரிந்துரையை ஏற்றதால்,
அப்புசாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து கோவை மத்திய
சிறையில் அடைக்கப்பட்டார்.
