/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கஞ்சா வழக்கில் கைதான தந்தை-மகன் மீது குண்டாஸ்
/
கஞ்சா வழக்கில் கைதான தந்தை-மகன் மீது குண்டாஸ்
ADDED : டிச 15, 2025 06:20 AM
கோபி: அந்தியூர் அருகே ஒன்னக்கரைபுதுார் பகுதியில், விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்ததாக, அதே பகுதியை சேர்ந்த ஜடமாத கவுடர், 63, அவரின் மகன் கெம்பன், 27, ஆகியோரை, கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர்.
இதையடுத்து பல்வேறு கஞ்சா வழக்கில் சம்பந்-தப்பட்டிருந்தால், இருவரையும் குண்டாஸ் வழக்கில் கைது
செய்ய, துறை ரீதியாக மாவட்ட நிர்வாகத்திடம் போலீசார் அனுமதி கோரியிருந்தனர்.
கலெக்டர் கந்தசாமி உத்தரவுப்படி, கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவர் மீதும், குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்க, கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்றிரவு அழைத்து சென்றனர்.

