ADDED : ஜூலை 11, 2025 01:05 AM
சென்னிமலை, சென்னிமலை-ஊத்துக்குளி ரோடு ஆதித்யா நகரில் அமைந்துள்ள, ஓம் நர்மதை மருந்தீஸ்வரர் ஆலயத்தில், குரு பூர்ணிமா வழிபாடு நேற்று நடந்தது.
இதையொட்டி சிறப்பு யாகம், மகாலட்சுமி யாகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பச்சைக் கயிறு, பச்சை குங்கும பொட்டு மற்றும் பூஜையில் வைத்த நாணயம் வழங்கப்பட்டது.
* ஈரோடு மாவட்ட கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி ஒரு கிலோ, 64 ரூபாய், நேந்திரன், 44 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழை தார், 910, தேன்வாழை, 700, பூவன், 670, ரஸ்த்தாளி, 610, மொந்தன், 460, ரொபஸ்டா, 430, பச்சைநாடான், 480 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 3,147 வாழைத்தார்களும், 8.66 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. சந்தைக்கு, 6,000 முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள், 22,000 முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள், 22,000 முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 250 பசு மாடுகள் விற்பனைக்கு வரத்தானது. கலப்பின மாடுகளும் அதிகமாக கொண்டு வரப்பட்டன. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநில வியாபாரிகள், விவசாயிகள், 90 சதவீத கால்நடைகளை வாங்கி சென்றனர்.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 114 மூட்டை நிலக்கடலை (காய்ந்தது) வரத்தானது. ஒரு கிலோ, 73 ரூபாய் முதல், 75 ரூபாய் வரை, 37 குவிண்டால் நிலக்கடலை, 2.51 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை நடந்தது. சந்தைக்கு, 10 எருமை, 150 சிந்து மாடு, 175 ஜெர்சி மாடுகள் கொண்டு வரப்பட்டன. எருமை, 18-40 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. சிந்து மற்றும் கலப்பின மாடு, 20-48 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. வளர்ப்பு கன்றுகள், 6,000 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. அதேபோல் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள், ௨௫௦க்கும் மேல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ வெள்ளாடு, 7,000 ரூபாய், 10 கிலோ செம்மறி ஆடுகள், 6,500 ரூபாய் வரை விலை போனது.
* ஈரோடு வ.உ.சி., பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு, கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைந்ததால், ஒரு கிலோ, 40 முதல் 45 ரூபாயாக உயர்ந்தது. தற்போது மீண்டும் வரத்து அதிகரித்து விலை மீண்டும் குறைகிறது. நேற்று, 25 கிலோ பெட்டி, 500 ரூபாய்க்கு வரத்தானதுடன் கூடுதலாக வரத்தானது. இதனால் ஒரு கிலோ, 20 முதல், 25 ரூபாய்க்குள் விற்பனையானது.
* கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் பருப்பு ஏலத்தில் ஒரு கிலோ, 255 ரூபாய் முதல் 268 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், 5,817 கிலோ தேங்காய் பருப்பு, 15.29 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. மொத்தம், 47 மூட்டை வந்தது. ஒரு கிலோ அதிகபட்ம், 257.67 ரூபாய்; குறைந்தபட்சம், 218.78 ரூபாய்க்கும் ஏலம் போனது.