/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குருநாதசுவாமி கோவில் பண்டிகை அந்தியூரில் பஸ் வழித்தடத்தில் மாற்றம்
/
குருநாதசுவாமி கோவில் பண்டிகை அந்தியூரில் பஸ் வழித்தடத்தில் மாற்றம்
குருநாதசுவாமி கோவில் பண்டிகை அந்தியூரில் பஸ் வழித்தடத்தில் மாற்றம்
குருநாதசுவாமி கோவில் பண்டிகை அந்தியூரில் பஸ் வழித்தடத்தில் மாற்றம்
ADDED : ஆக 07, 2024 06:51 AM
அந்தியூர்: அந்தியூர் குருநாதசுவாமி கோவிலின் நடப்பாண்டு தேர்த்திருவிழா இன்று தொடங்கி, ௧௧ம் தேதி வரை நடக்கிறது.
இதில் லட்சக்கணக்கில் மக்கள் கலந்து கொள்வர்.இதனால் மக்கள் கோவிலுக்கு நெரிசலின்றி வந்து செல்வதற்காக, போக்குவரத்து துறை சார்பில் அந்தியூர் ரவுண்டானா, வாரச்சந்தை வளாகத்தில் சிறப்பு பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. அத்தாணி மார்க்கமாக கோவிலுக்கு வரும் வாகனங்கள், சின்னதம்பிபாளையம், ஜீவா செட், மைக்கேல்பாளையம் வழியாக வனக்கோவிலுக்கு செல்ல வேண்டும்.ஆப்பக்கூடல் வழியாக வரும் வாகனங்கள், ஜி.ஹெச்.கார்னர் வழியாக புதுக்காடு சாலையில் வனக்கோவிலுக்கு செல்ல வேண்டும். பவானி, அம்மாபேட்டை மற்றும் வெள்ளித்திருப்பூர் வழியாக வரும் வாகனங்கள், அண்ணாமடுவு, அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் வந்த பின், அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் மூலம், குருநாதசுவாமி மற்றும் வனக்கோவிலுக்கு மக்கள் சென்று வரலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.