ADDED : மே 02, 2024 07:30 AM
ஈரோடு : நேற்று மாலை, 5:19 மணிக்கு குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார்.
இதற்காக ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள, வலம்புரி விநாயகர் கோவிலில் யாக பூஜை நடந்தது. தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. உலக நன்மை வேண்டி, பொதுமக்கள் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் பெற யாக பூஜைகள் நடந்தது.
* பெருந்துறை, வேதநாயகி உடனமர் சோழீஸ்வரர் கோவிலில், நேற்று குரு பகவானுக்கு சிறப்பு அபி ேஷகம், யாக வழிபாடு, பரிகார பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* அவல்பூந்துறை, ராட்டை சுற்றிப்பாளையத்தில் உள்ள தென்னக காசி என போற்றப்படும் பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பக்தர்கள் பாலாபி ேஷகம் செய்து வழிபட்டனர். கோவிலின் நுழைவு வாயிலில், 39 அடி உயரம், 18 அடி அகலம் கொண்ட பைரவர் சிலை அமைந்துள்ளது. நேற்று ஏராளமான பக்தர்கள், குடம், குடமாக தங்கள் கைகளால் பைரவருக்கு பாலாபி ேஷகம் செய்து வழிபட்டனர்.
ஸ்ரீவிஜயசுவாமிகள் தலைமையில் வழிபாடு நடந்தது.

