/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.31 -ஆயிரம் மதிப்பு குட்கா பறிமுதல்
/
ரூ.31 -ஆயிரம் மதிப்பு குட்கா பறிமுதல்
ADDED : ஜூலை 22, 2024 08:54 AM
டி.என்.பாளையம் :-டி.என்.பாளையம் அருகே வாணிப்புத்துாரில், பங்களாப்புதுார் போலீசார் நேற்று வாகன தணிக்-கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த ஒரு காரில் இருவர் வந்தனர். போலீசாரை கண்டதும் நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றனர். இருவ-ரையும் பிடித்த போலீசார், காரில் சோதனை செய்தனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்-பட்ட குட்கா புகையிலை பொருட்கள், 40 கிலோ எடையில் இருந்தது. அதன் மதிப்பு, ௩௧ ஆயிரம் ரூபாய். இருவரும் நாமக்கல் மாவட்டம் குமார-பாளையம், சடையம்பாளையம் விமல் அபி-னேஷர், 33; சேலம் மாவட்டம் புள்ளகவுண்டம்பாளையம், வினோபாஜி நகர் குருநாதன், 30, என தெரிந்தது. காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்-தனர்.
* வாணிப்புத்துார், கவுண்டம்பாளையம், ஜே.ஜே.நகரில் குணசேகரன் என்பவரின் பெட்டிக்-கடையில், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த பங்களாப்புதுார் போலீசார், அவரை கைது செய்தனர்.
* பங்களாபுதுார் போலீசார், டி.ஜி.புதுாரில், சோத-னையில் ஈடுபட்டனர். இதில் கலாமணி, 42, என்-பவரது பெட்டிக்கடையில், ஹான்ஸ், பான்ம-சாலா உள்ளிட்ட புகையிலை பொருள் சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.