/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'கேமரா மீது கை; மேனேஜருக்கு அலாரம்':ஏ.டி.எம்.,மில் தடுக்கப்பட்ட திருட்டு முயற்சி

ADDED : அக் 12, 2025 01:58 AM
ஈரோடு;நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், பெரும்பாறை காடு, மரியதாஸ் மகன் கேசவன், 22; நேற்று நள்ளிரவு, 12:30 மணியளவில், ஈரோடு-கருங்கல்பாளையம் காவிரி சாலை அழகரசன் நகர் எதிரேயுள்ள எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., மையத்துக்கு வந்தார். சிறிது நேரம் அங்கு நடமாடிய நிலையில், திடீரென வெளியே வந்து முன்புறம் இருந்த 'சிசிடிவி' கேமராவை உடைத்து எறிய முற்பட்டுள்ளார்.
கேமராவை தொட்டவுடன் வங்கி மேலாளர் விஜயகுமார் மொபைல் போனுக்கு எச்சரிக்கை அலாரம் சென்றது. அவர் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். கருங்கல்பாளையம் போலீசார் விரைந்து சென்று கேசவனை பிடித்தனர். அடையாளம் தெரியாமல் இருக்க ஹெல்மெட் அணிந்திருந்தார். மது போதையில் இருந்துள்ளார். ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்ததில், மையத்தில் திருடும் நோக்கில் வந்தது உறுதி செய்யப்பட்டதால், அவரை கைது செய்தனர்.