/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஒப்படைப்பு
/
ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஒப்படைப்பு
ADDED : ஆக 23, 2025 01:51 AM
ஈரோடு, விநாயகர் சதுர்த்தி விழா வரும், 27ல் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஹிந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்படும்.
இதற்காக ஈரோடு பெரிய சடையம் பாளையத்தில் உள்ள ஹிந்து முன்னணி அலுவலகத்தில், 300க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
சதுர்த்தி நாளில் பிரதிஷ்டை செய்ய, மாவட்ட பொது செயலாளர் கார்த்தி தலைமையில், 300க்கும் மேற்பட்ட சிலைகளை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் எடுத்து சென்றனர். ஈரோடு சம்பத் நகரில், 27ம் தேதி, 11 அடி உயரம் கொண்ட வெற்றி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். ஈரோட்டில், 30ம் தேதி மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது.