/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கைத்தறி ரக ஒதுக்கீடு விழிப்புணர்வு
/
கைத்தறி ரக ஒதுக்கீடு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 23, 2025 02:18 AM
பள்ளிப்பாளையம், ஜூலை 23
கைத்தறி தொழில் நலிவடையாமல் பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும், மத்திய அரசால், 1985ல் கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டு, 1998 முதல், 11 ரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட குறிப்பிட்ட தொழில்நுட்ப குறிப்பீடுகளுடைய, ரகங்களான கரை பாவு போட்டு டிசைனுடன் கூடிய காட்டன் வேட்டி ரகம், பாவு போட்டு மற்றும் ஊடை போட்டு மற்றும் புட்டா டிசைனுடன் கூடிய காட்டன் மற்றும் பட்டு சேலை ரகம், கரை மற்றும் முந்தியுடன் கூடிய காட்டன் துண்டு ரகம், கரை பாவு போட்டு டிசைன் மற்றும் முந்தியுடன் கூடிய கிரே அங்கவஸ்திரம், லுங்கி, பெட்சீட், ஜமக்காளம், சட்டை துணிகள், கம்பளி, சால்வை, உல்லன் ட்வீட் மற்றும் சத்தார்க் உள்ளிட்ட, 11 வகை ரகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது, கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம், 1985 சட்டப்படி சட்டத்தை மீறிய செயல் என்பது குறித்து, விழிப்புணர்வு கூட்டம், நேற்று முன்தினம் மாலை, பள்ளிப்பாளையம் அருகே கணபதிபாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருச்செங்கோடு உதவி அமலாக்க அலுவலர் விஜயராணி தலைமையில் நடந்தது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் குறித்தும், கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட, 11 வகை ரகங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள் மற்றும் தொழிலாளர் நலவாரியம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இதில், விசைத்தறி உரிமையாளர்கள், நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.