/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆடிப்பெருக்கு நாளில் மழையால் மகிழ்ச்சி
/
ஆடிப்பெருக்கு நாளில் மழையால் மகிழ்ச்சி
ADDED : ஆக 04, 2025 08:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகர்: பவானிசாகர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில், ஒரு மாதமாகமே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று மாலை மழை பெய்ய துவங்கியது.
பவானிசாகர் நகர், புங்கார், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காற்று இல்லாமல் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது. ஆடிப்பெருக்கு நாளில் மழை பெய்ததால், ஆண்டு முழுவதும் மழை பெய்யும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.