/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நடப்பாண்டு முதல் முறையாக பவானிசாகர் அணை நீர்மட்டம் 103 அடியை எட்டியதால் மகிழ்ச்சி

ADDED : நவ 06, 2025 01:35 AM
புன்செய்புளியம்பட்டி, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம், 105 அடி, 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. நீர்பிடிப்பு பகுதியான, நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து, பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்று காலை 8:00 மணியளவில், 103 அடியை எட்டியது.
நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு, 3,874 கன அடி நீர் வந்தது. அணையின் நீர்மட்டம், 103.01 அடியாகவும், நீர் இருப்பு, 31.1 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி, அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்துக்காக, 300 கன அடி தண்ணீர், குடிநீர் தேவைக்காக, 100 கன அடி நீர் என மொத்தம், 2,700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
அணை நீர்மட்டம், 103 அடியை எட்டியுள்ளதால் பாசன பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடப்பு ஆண்டில் முதன் முறையாக, பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 103 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.