/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஹேப்பி நியூ இயர்... ஹேப்பி நியூ இயர் வந்ததே...' வழிபாடு செய்ய கோவில்களில் கூட்டம் திரண்டதே!
/
'ஹேப்பி நியூ இயர்... ஹேப்பி நியூ இயர் வந்ததே...' வழிபாடு செய்ய கோவில்களில் கூட்டம் திரண்டதே!
'ஹேப்பி நியூ இயர்... ஹேப்பி நியூ இயர் வந்ததே...' வழிபாடு செய்ய கோவில்களில் கூட்டம் திரண்டதே!
'ஹேப்பி நியூ இயர்... ஹேப்பி நியூ இயர் வந்ததே...' வழிபாடு செய்ய கோவில்களில் கூட்டம் திரண்டதே!
ADDED : ஜன 02, 2024 10:52 AM
ஆங்கில புத்தாண்டை ஈரோடு மாவட்ட, மாநகர மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். ஆண்டின் முதல் நாளில் ஆண்டவனை தரிசனம் செய்ய ஆர்வம் காட்டியதால், கோவில்களில் கூட்டம் அலைமோதியது. நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஈரோட்டில் ப.செ.பூங்கா சந்திப்பில் சி.எஸ்.ஐ., சர்ச் முன் திரண்ட, 2,௦௦௦க்கும் மேற்பட்டோர், 2024ம் ஆண்டை உற்சாகமாக வரவேற்றனர். புத்தாண்டு பிறந்ததும் வண்ண பலுான்களை பறக்க விட்டும், வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டும், கேக் வெட்டியும் கொண்டாடினர்.
இதையடுத்து ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான நேற்று, மாநகர் மற்றும் மாவட்டத்தில், கோவில்களுக்கு மக்கள் படையெடுத்தனர். இதனால் கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. மாநகரில் கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கஸ்துாரி ரங்கநாதர் கோவில், மகிமாலீஸ்வரர், காவேரிக்கரை சோழீஸ்வரர் கோவில், வ.உ.சி., பூங்கா ஆஞ்சநேயர் கோவில், ஈரோடு பெரிய மாரியம்மன் மற்றும் வகையறா கோவில்களில், கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில்களுக்கு அதிகாலை முதலே மக்கள் செல்லத் தொடங்கினர்.
இதேபோல் ஈரோடு சி.எஸ்.ஐ., சர்ச், புனித அமல அன்னை ஆலயம், ரயில்வே காலனி திரு இருதய ஆண்டவர் ஆலயம் உட்பட அனைத்து சர்ச்சுகளிலும், புத்தாண்டு பிறப்பையொட்டி நள்ளிரவில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில், கிறிஸ்தவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
* புன்செய்புளியம்பட்டியில் அண்ணாமலையார், கரிவரதராஜ பெருமாள், காமாட்சியம்மன், ஊத்துக்குழி அம்மன், ஐயப்பன் கோவில்களில், அதிகாலை, நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. ஊத்துக்குளி அம்மன் சந்தனகாப்பு, பிளேக் மாரியம்மன் வெள்ளிக்கவசத்தில் அருள்பாலித்தனர். கோவை சாலை அந்தோணியார் சர்ச், சி.எஸ்.ஐ., பெந்தகொஸ்தே, டி.ஈ.எல்.சி, சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
* சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.
* பெருந்துறையில் வெங்கட்டரமண பெருமாள் கோவில், சோளீஸ்வரர் கோவில், கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவில், காஞ்சிக்கோவில் சீதேவி அம்மன் கோவில், தங்கமேடு தம்பிகலை அய்யன் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், காலை, 6:30 மணி முதல் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம், ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை தொடர்ந்து இரவு, 8:00 மணி வரை நடந்தது. மூலவர் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்கள் குவிந்ததால் சிறப்பு தரிசனத்தில் அரை மணிநேரமும், பொது தரிசனத்தில் ஒரு மணி நேரமும் காத்திருக்க நேரிட்டது.
* கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், தான்தோன்றியம்மன், சாரதா மாரியம்மன், கோபி பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது.
* கொடுமுடி மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவிலுக்கு, பல்வேறு மாவட்ட மக்கள், அதிகாலை முதலே வரத் தொடங்கினர். பலர் காவிரி ஆற்றில் நீராடினர். தொடர்ந்து மகுடேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.
பூங்காவில் குவிந்த மக்கள்
ஆங்கில புத்தாண்டு விடுமுறையால், பவானிசாகர் பூங்காவுக்கு, ஆயிரக்கணக்கானோர் வந்தனர். பூங்காவில் குழந்தைகள் ஊஞ்சல் ஆடியும் சறுக்குகளில் ஏறி விளையாடியும், பெற்றோருடன் குதுாகலித்தனர். இதேபோல் கொடிவேரி தடுப்
பணைக்கும் மக்கள் அதிகம்
வந்தனர்.

