/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வட்டமலைகரை அணை நீர்மட்டம் 5 நாளில் 11 அடி உயர்வால் மகிழ்ச்சி
/
வட்டமலைகரை அணை நீர்மட்டம் 5 நாளில் 11 அடி உயர்வால் மகிழ்ச்சி
வட்டமலைகரை அணை நீர்மட்டம் 5 நாளில் 11 அடி உயர்வால் மகிழ்ச்சி
வட்டமலைகரை அணை நீர்மட்டம் 5 நாளில் 11 அடி உயர்வால் மகிழ்ச்சி
ADDED : டிச 27, 2025 07:51 AM

காங்கேயம்: வெள்ளகோவில் அருகே வட்டமலைகரை அணை நீர்மட்டம், ஐந்து நாட்களில், 11 அடி உயர்ந்தது.
வெள்ளக்கோவில் அருகே, 700 ஏக்கர் பரப்பளவில், 26 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கும் வகையில், வட்டமலைக்கரை அணை, 1980ல் கட்டப்பட்டது. இதன் மூலம் வெள்ளக்கோவில், தாசனாயக்கன்பட்டி, உத்தமபாளையம், புதுப்பை உள்ளிட்ட பகு-திகளில், 6,000 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது.
கடந்த ஜன., முதல் ஆழியாறு பாசன திட்டத்தில் இருந்து வட்ட-மலை கரை அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதன்படி கடந்த, 18ம் தேதி மதியம் கள்ளிபாளையம் மதகில் இருந்து, 240 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரானது நான்கு நாட்கள் கழிந்து, 22ம் தேதி அணையை வந்தடைந்தது.
இதன் மூலம் கள்ளிபாளையம் மதகில் இருந்து வட்டமலைக்-கரை அணை வரை உள்ள தடுப்பணை அனைத்தும் நிரம்பி வழி-கின்றன. கடந்த ஐந்து நாட்களில் அணை நீர்மட்டம், 11 அடி வரை உயர்ந்துள்ளது. தொடர்ந்து, 220 கன அடி நீர் வந்து கொண்-டிருக்கிறது. அணை நிரம்புவதற்கு தேவையான நடவடிக்கையில் பொதுப்
பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

