/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அத்திக்கடவு திட்டத்தில் நல்லுார் குளத்துக்கு வந்த நீரால் மகிழ்ச்சி
/
அத்திக்கடவு திட்டத்தில் நல்லுார் குளத்துக்கு வந்த நீரால் மகிழ்ச்சி
அத்திக்கடவு திட்டத்தில் நல்லுார் குளத்துக்கு வந்த நீரால் மகிழ்ச்சி
அத்திக்கடவு திட்டத்தில் நல்லுார் குளத்துக்கு வந்த நீரால் மகிழ்ச்சி
ADDED : செப் 20, 2024 01:25 AM
புன்செய் புளியம்பட்டி, செப். 20-
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில், புன்செய் புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில், 80 ஏக்கர் புங்கம்பள்ளி குளம், 60 ஏக்கர் பரப்பு நல்லுார் குளம், நொச்சிக்குட்டை குளம் மற்றும், 50க்கும் மேற்பட்ட குட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன.
திட்டம் நடைமுறைக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் இந்த குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வரவில்லை. இவற்றுக்கு தண்ணீர் விடக்கோரி, விவசாயிகள் ஒன்றிணைந்து கடந்த, 17ல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய சத்தி தாசில்தார் சக்திவேல், அத்திக்கடவு திட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இந்நிலையில் புங்கம்பள்ளி மற்றும் நல்லுார் குளத்துக்கு வெள்ளோட்ட அடிப்படையில் நேற்று முன்தினம் தண்ணீர் விடப்பட்டது. தற்போது நல்லுார் குளத்திற்கு தண்ணீர் வர துவங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நல்லுார் குளத்துக்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளதால், சாலையோரங்களில் மரக்கன்று நடும் பணியில், தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் நல்லுார் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.