/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கழிப்பறையில் பிரசவம்; குழந்தை பலி பெண்ணிடம் சுகாதாரத்துறை விசாரணை
/
கழிப்பறையில் பிரசவம்; குழந்தை பலி பெண்ணிடம் சுகாதாரத்துறை விசாரணை
கழிப்பறையில் பிரசவம்; குழந்தை பலி பெண்ணிடம் சுகாதாரத்துறை விசாரணை
கழிப்பறையில் பிரசவம்; குழந்தை பலி பெண்ணிடம் சுகாதாரத்துறை விசாரணை
ADDED : ஜூலை 26, 2025 01:17 AM
ஈரோடு, பெருந்துறை, சிப்காட்டில் தனியார் நுாற்பாலையில் வேலை செய்யும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மோனிகா, 24; திருமணம் ஆகாதவர். நுாற்பாலை விடுதி
யில் தங்கியுள்ளார். கடந்த, ௨௨ம் தேதி கழிவறையில் மோனிகாவுக்கு குழந்தை பிறந்தது. பக்கெட்டில் சிசுவை போட்டதில் இறந்து விட்டது. இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர். இதில் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றியபோது, அங்கு பழகிய நபரால் கர்ப்பமானது தெரியவந்தது.
இதை யாருக்கும் தெரிவிக்காததும் தெரிய வந்தது. இதனிடையே சம்பவம் பற்றி, ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் அருணா தலைமையிலான குழுவினர், அப்பெண்ணிடமும், சம்பவம் நடந்த இடத்திலும் நேற்று விசாரித்தனர்.
இதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்று தெரிகிறது.