/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சுகாதார செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
சுகாதார செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 11, 2025 12:56 AM
ஈரோடு, தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் வெற்றிசெல்வி தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலர் ஈஸ்வரி முன்னிலை வகித்தார். மாநில துணை செயலர் வித்யாதேவி, கோரிக்கை குறித்து பேசினார்.
காலியாக உள்ள, 4,000க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர், துணை செலவியர் பணியிடங்களை அதற்கான பயிற்சி பெற்றவர்களை கொண்டு நிரப்ப வேண்டும். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தை சமூக நலத்துறைக்கு மாற்ற
வேண்டும்.
செவிலியர்களை மக்கள் சேவைக்கு மாறாக கணினி பணியில் மூழ்கடிப்பதை தவிர்த்து, அப்பணிக்கு வேறு நபர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.